உங்களுக்கு விவரம் வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.இதன் விளைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குஉள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இது குறித்து கூறுகையில், அது ரஜினியின் அறிக்கை.அதற்கு நாம் எப்படி பதில் சொல்ல முடியும்.உங்களுக்கு விவரம் வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல முடியாது.ரஜினியின் ஆரோக்கியம் மிக முக்கியம்.ரஜினிகாந்த் கூறியதில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…