மருத்துவ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்க வழிவகை செய்திடுக – ஓபிஎஸ்
மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தல்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ கல்லூரி இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவதோடு, சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருவதோடு, பொது சுகாதாரச் சவால்களை சந்திப்பதிலும், மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் அதிமுக தான்.
இந்த நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டு, நான்கு கலந்தாய்வுகளுக்குப் பின்பும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அந்த இருக்கைகளை மத்திய அரசிடம் இருந்து திரும்பப் பெற்று, அவற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட தகுதியுடையோர் மத்தியில் நிலவுகிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கவும், மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மத்திய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதி அடிப்படையில் வழங்கவும், மருத்துவ சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்திடுக! pic.twitter.com/cAXd3zuoGF
— O Panneerselvam (@OfficeOfOPS) April 15, 2022