தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய சேதம் தவிர்ப்பு.! அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

Default Image

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. – அமைச்சர் சேகர் பாபு தகவல். 

வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் விழுந்தன.

புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது.

இந்த புயல் பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் கூறுகையில், ‘ வடசென்னையை பொறுத்தவரை மிக குறைந்த அளவிலான மக்களே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் பாதுகாப்பு காரணங்களுக்காக தான் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ‘ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.  மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்