2024 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய துறைகளின் வரிச்சலுகைகள்… 

Financial Minister Nirmala Sitharaman - Budget 2024

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான குறுகிய கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்வுக்கு முன்னர் பாரம்பரியமாக செய்யப்படும் “அல்வா” சமைத்தல் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்ஜெட் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது.

டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!

பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசின் கடைசி பட்ஜெட் தாக்கல் இதுதான். வரும் ஏப்ரல் , மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பட்ஜெட் குறுகிய கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது . தேர்தல் நடைபெறும் வருடம் என்பதால் பல்வேறு சலுகைகள், புதிய திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆகியவை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் :

இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு துறைகள், நிறுவனங்களை சேர்ந்த மூத்த முக்கிய அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பார்ப்புகளை தனியார் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதில் இருந்து பார்க்கையில், இந்த வருட பட்ஜெட் புதியதாக தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சலுகை அமைக்கும் விதமாக இருக்க கூடும் என்று அத்துறை நிறுவனத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மற்றும் அதன் வளங்களை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் AI தொழில்நுட்பத்தில், புதிய மேம்பாடு திட்டங்களை ஊக்குவிக்கும் வண்ணம் பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறலாம் என்று அத்துறை நிறுவனத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் :

எலக்ட்ரிக் வாகனங்களின் வேகமான வளர்ச்சி மற்றும்  அதன் உற்பத்தி திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், பட்ஜெட்டில் புதிய அம்சங்கள் இடம்பெறும் என்றும், இந்தியாவின் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிவை குறித்து, எதிர்காலத்தை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்ல சலுகைகள் தேவை என்றும் அத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சார்ஜிங் நிலையங்கள் :

மேலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க, எதுவாக அதற்கான வரி விகிதங்களில் குறைப்புகள்  இருக்கும் என்றும்,  குறிப்பாக லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வரி விகிதமானது 18% இலிருந்து 5%ஆக குறைக்கும் நோக்கில், குறிப்பிடத்தக்க வரி விகித குறைப்பு இருக்கும் என்று அந்த தொழில்துறை நம்பிக்கை கொண்டுள்ளது,

சைபர் செக்கியூரிட்டி :

மேலும், நமது நாட்டில் தற்போது வணிகங்கள் பெரும்பாலும்,  டிஜிட்டல் மையமாக மாறிவிட்டன. அசுரர் வேகத்தில் வளர்ந்து வரும் டிஜிட்டல் தளத்தின், இணைய பாதுகாப்பு மிக முக்கிய ஒன்றாக இருக்கிறது . அதனை கருத்தில் கொண்டு , இணையப் பாதுகாப்புத் தேவைகள் கவனிக்கும் வண்ணம் சைபர் செக்கியூரிட்டி துறைக்கு சலுகைகள் வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்