இன்று அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்தநிலையில் மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 10-ம் வகுப்புத் தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் வரைநடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 10-ம் வகுப்புத் தேர்வை மேலும் தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலதரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வை ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதிவரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இதற்க்கான புதிய தேர்வு அட்டவணையையும் அரசு வெளியிட்டது. இந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையனை, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தினால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் , 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 அல்லது 3 நாள்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும். எங்களின் கோரிக்கையை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், 15 நாட்கள் தேர்வைத் தள்ளி வைக்கும் அரசின் முடிவை திமுக வரவேற்பதாக தெரிவித்தார்.
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…