மக்கள் நீதி மய்யத்தில் தமிழிசை தீடீர் பதிவா? பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் மெயில் …..
மக்கள் நீதி மய்யம் சார்பில் , மக்கள் நீதி மய்யத்தில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் இணையத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே மெயில் வரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மிஸ்ட் கால் கொடுத்து கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்தவர்கள் பாஜகவினர். இந்த வரலாறு ஊரறியும். இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மெயில் வருவதாக கூறி சிரித்தார்.
மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இமெயில் அனுப்பியிருக்கிறார்கள்.அந்த இமெயிலில் நான் நாம் ஆனோம். இன்றிலிருந்து எங்கள் கட்சியில் நீங்கள் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண் இதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
என் மெயில் ஐடி எப்படி இவர்களுக்குக் கிடைத்தது. உறுப்பினர்களை சேர்க்க, கிடைக்கும் இமெயில் முகவரிக்கெல்லாம் கமல் அழைப்பு அனுப்புகிறார். இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யான கட்சி நடத்தி வருகிறார். கையில் கிடைக்கும் இமெயில் ஐடிக்கு எல்லாம் மெயில் அனுப்புகிறார் என்று கிண்டடித்துக்கொண்டே பேசினார். தனக்கு வந்த மெயிலையும் காண்பித்தார்.
தமிழிசையின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள மக்கள் நீதி மய்யம், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை என்றும், இணையதள பக்கத்தில் பதிவிட்டால் மட்டுமே அவர்களுக்கு மெயில் அனுப்பப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் சொல்வதைப் பார்த்தால் தமிழிசை பதிவு செய்திருப்பாரோ?
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.