பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்.! திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

DMK MLA Karunanidhi son and daughter in law

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ வீடானது சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ளது.  அவர் வீட்டில் பணிப்பெண்ணாக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமி வேலைபார்த்து வந்துள்ளதாக தெரிகிறது. அவர் நேற்று முன்தினம் உடலில் காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

அந்த சிறுமி  தனது உடலில் ஏற்பட்ட காயங்கள் , ஆண்டோ வீட்டில் தனக்கு நேர்ந்த துன்புறுதல்கள் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மனைவி மெர்லினா ஆகியோர்  வீட்டில் தான் பணிப்பெண்ணாக 6 மாதங்களுக்கு முன்னர் சேர்ந்ததாகவும், ஆரம்பம் முதலே அவர்கள் தன்னை கொடுமை படுத்தியதாகவும், அதனால் தான் வேலைக்கு வரவில்லை என கூறியதாகவும், ஆனால் தான் எம்எல்ஏ மருமகள் என மெர்லினா மிரட்டி, மீண்டும் தன்னை வேலைக்கு அழைத்ததாகவும் கூறினார்.

அதிக நேரம் வேலை வாங்குவார்கள் என்றும்  தான் வேலை செய்யவில்லை என்பதற்காக தன் மீது சூடு வைத்து, கரண்டியால் அடித்து பல முறை துப்புறுதியதாகவும் அந்த வீடியோவில் சிறுமி கூறி இருந்தார். (சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு அந்த வீடியோ பதிவை நமது தளத்தில் பதிவிடவில்லை)

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து, நீலாங்கரை மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்றனர்.

சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தை அடுத்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் (பாதிக்கப்பட்ட சிறுமி  பட்டியலினத்தை சேர்ந்தவர்), குழந்தை துன்புறுத்தல் தடுப்பு சட்டம், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீலாங்கரை மகளிர் காவல் நிலையம் சார்பில் சம்மன் அனுப்பப்படும். சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ அறிக்கைகள் கொண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்