லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் வந்துள்ளார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு.

சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய மகேந்திரன், 78 ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் பேசிய மு.க ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் திமுக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும்.  லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டவர்கள் திமுகவுக்கு வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திமுகவில் இணைந்த பிறகு பேசிய மகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் சாதாரண தொண்டனாக செயல்படுவேன். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி என்றும் திமுகவின் கொள்கைகளே எனது சித்தாந்தமாக இருந்தது எனவும் பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

20 seconds ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

30 minutes ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

56 minutes ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

3 hours ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

3 hours ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

4 hours ago