ஈஷாவில் களைக்கட்டிய மஹாசிவராத்திரி விழா.! சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர்.!

Default Image
  • கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா பிரமாண்டமாகவும், வெகு விமர்சியாகவும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. பின்னர் பல அரிய ஆன்மிக சாத்தியங்களை உள்ளடக்கிய சிவராத்திரியில் இரவு முழுவதும் முதுகுதண்டை நேராக வைத்து விழிப்பாக இருப்பது பல நன்மைகளை வழங்கும். இதை அனைவர்க்கும் கொண்டும் சேர்க்கும் விதமாக ஈஷா யோகா மையம் மஹா சிவராத்திரியை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

ஈஷாவில் களைக்கட்டிய மஹாசிவராத்திரி விழா.! சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர்.!

இவ்விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. முதலில் தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்ச பூத ஆராதனையுடன் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு.வெங்கையா நாயுடை சத்குரு வரவேற்று சூர்ய குண்டம், நாகா சன்னிதி, லிங்க பைரவி, தியானலிங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்றார். பின்னர் மரணம் தொடர்பாக சத்குரு எழுதிய Death – An insight story என்ற பெயரிலான புதிய ஆங்கில புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் அவர்கள் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், யோகக் கலைக்கு மதம், மொழி, இன வேறுபாடுகள் இல்லை என்றும் அது ஒரு அறிவியல் செயல்பாடு எனவும் குறிப்பிட்டார்.

ஈஷாவில் களைக்கட்டிய மஹாசிவராத்திரி விழா.! சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர்.!

மேலும் மக்களை நல்வழிப்படுத்தவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவும் சத்குருவைப் போன்றவர்கள் தேவைப்படுவதாகவும் புகழ்ந்துரைத்தார். சிவனுக்கு மரியாதை அளிப்பதற்கான ஒரு சிறந்த நாளாக இது உள்ளது. சிவன் ஆதியோகி, அதாவது உலகின் முதல் யோகி எனவும் அழைக்கப்படுகிறார். 12 ஜோதிர் லிங்கங்கள் இந்தியா முழுவதும் இருப்பதன் மூலம் சிவன் இந்தியா முழுவதும் பரவி இருக்கிறார் என்பதை அறியலாம். இதைத் தொடர்ந்து பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், நம்முள் இருக்கும் அனைத்துத் தடைகளையும் உடைப்பதற்கு இந்த இரவு உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து திரைப்படப் பின்னணிப் பாடகர்களின் பாடல்கள், லெபனான் நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றன. ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் களரி, தேவார இசைப் பாடல், கிராமியப் பாடல்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றன. மேலும் இவ்விழாவில் மத்திய-மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர் திரளாகப் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்