ஈஷாவில் 11-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்.. அந்தோணிதாசன் உட்பட பல நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்பு.!

Default Image

கோவை ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 11-ம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப் புற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

“சிவனின் அருள் நிறைந்த இரவு” என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி இரவு, நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈஷாவின் 27-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 12-ம் தேதி காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

இந்தாண்டு கொரோனா பாதிப்பு சூழல் நிலவுவதால் அரசின் வழிகாட்டுதல்படி, அதிகளவில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மிக குறைவான எண்ணிக்கையிலான மக்களே நேரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சமூக இடைவெளி, முக கவசம் அணிவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விழா அரசின் அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சத்குருவுடன் நள்ளிரவு தியானம்:

சத்குரு முன்னிலையில் நடக்கும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைச்சாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்:

குறிப்பாக, இரவு முழுவதும் மக்களை விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ளும் விதமாக தமிழ் நாட்டுப் புற பாடகர் திரு.அந்தோணி தாசன், பிரபல தெலுங்கு பாடகி மங்களி, ராஜஸ்தானிய நாட்டுப் புற கலைஞர் திரு.குட்லே கான், பின்னணி பாடகர் திரு.பார்த்தீவ் ஹோஹில், கபீர் கஃபே இசை குழு, கர்னாடக இசை பாடகர் திரு.சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அவர்களுடன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சமஸ்கிரிதி குழுவினரும் உடன் இணைகின்றனர்.

இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ – டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ – டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

ருத்ராட்ச தீட்சை:

மஹாசிவராத்திரியை முன்னிட்டு சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதனை வீட்டிலேயே பெறுவதற்கு https://mahashivarathri.org/ta/rudraksha-diksha என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

முன்பதிவு அவசியம்

விழாவில் நேரில் பங்கேற்க https://isha.sadhguru.org/mahashivratri/attend-in-person/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்