மகர ஜோதியாக ஐயப்பன்…சரணம் கோஷத்தில் அதிர்ந்த சபரிமலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Default Image
  • சபரிமலையில் மகர ஜோதியாக ஐயப்பனின் தரிசனம் 
  • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

சபரிமலை ஜயப்பனின் மண்டல பூஜை முடிவடைந்து, தற்போது மகர ஜோதி தரிசனத்திற்காக நடையானது  திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை மற்றும்  பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.

Image result for ஐயப்ப பக்தர்கள்

பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற தங்க அங்கிகள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டும் அதன் பிறகு மாலை 6:25 மணிக்கு ஜய்யனுக்கு காணக்கிடைக்காத வகையில் தீபாராதனையானது நடைபெறும்.

Image result for ஐயப்பன் மகரஜோதி

தீபாராதனை முடிந்த சில வினாடிகளிலே பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஏற்றப்படும்.

Image result for மகரஜோதி நிகழ்வு நடக்கும்.இதனைத் தொடர்ந்து ஏற்றப்படும் மகரஜோதி  மூன்று முறை காட்சி தரும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடந்து செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு மகரசங்கரம பூஜை நடத்தப்படும்.

Image

இச்ஜோதி தரிசனத்தை காண்பதற்காக குவிந்துள்ள பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புல்மேட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல் கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவு ஆகிய இடங்களில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று காலை 9:00 மணி முதல் வடசேரிக்கரையில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related image

இந்நிலையில் தற்போது மகரஜோதியானது ஏற்றப்பட்டது.ஜோதியை தரிசித்த பக்தர்கள் சுவாமி சரணம் ஐய்யப்பா….பதினெட்டாம் படியனே சரணம் ஐயப்பா..! என்ற சரண கோஷங்கள் விண்ணை பிளந்தது.பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தென்பட்ட மகரஜோதியை கண்டு சரண கோஷமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தமிழக பக்தர்களுக்கு இந்த மகரஜோதி மிகவும் விஷேமானது காரணம் தைப்பொங்கல் அன்று மகரஜோதியாக ஐயப்பனின் தரிசனம் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பக்தர்கள் கருதுகின்றனர்.மேலும் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும் என்பார்கள் ஐய்யனின் அருளால் நல்லவையே நடக்கட்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்