மகாகவி பாரதியாரின் நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி ட்வீட்
“மகாகவி” என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.
இன்று நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் பாரதியாரின் பெருமையை பதிவிட்டு வருகின்ற்னர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன் இன்பத்தமிழ் கவிதைகளால் இந்திய மக்களின் விடுதலை வேட்கையை தூண்டியவர், பெண்ணுரிமை போராளி, சாதி மறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி, “மகாகவி” என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தன் இன்பத்தமிழ் கவிதைகளால் இந்திய மக்களின் விடுதலை வேட்கையை தூண்டியவர், பெண்ணுரிமை போராளி, சாதி மறுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி, “மகாகவி” என போற்றப்பட்ட சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாளில் அவரது தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன். pic.twitter.com/WuUB0qkcKA
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 11, 2021