ரவுடி மணி என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை..!
விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னை சென்ற காவல்துறை மணிகண்டனை பிடிக்க முயற்சி செய்தபோது மணிகண்டன் காவல்துறை எஸ்.ஐ பிரபு என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து ரவுடி மணிகண்டனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். வெட்டுப்பட்ட காவல் அதிகாரி பிரபு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் என்கவுண்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மணிகண்டன் கொல்லப்பட்ட இடம் அவரது உடல் பிரேத பரிசோதனை ஆகியவற்றை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளார்.
மேலும் மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்ட வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.