அரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் விசாரணை.!
திருச்செந்தூர் அருகே அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜரான வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை.
தந்தை , மகன் உயிரிழந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதனால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில், தந்தை, மகன் இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைக்க தகுதிச்சான்று வழங்கியவர் அரசு மருத்துவர் வெண்ணிலா, இவர் 15 நாள்கள் விடுப்பில் சென்ற நிலையில் மருத்துவர் வெண்ணிலா மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன் ஆஜரானார்.