Magalir Urimai Thogai : மகளிர் உரிமை திட்டம்.. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.!

Tamilnadu CM MK Stalin

திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டமானது இன்று செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.

கடந்த செப்டம்பர் 5 வரையில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அதற்கான காரணமும் கூறப்படும்.

இந்நிலையில், இன்று முதல் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டபடி, இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் செல்ல உள்ளார். அங்கு நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பலருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை துவங்கி வைக்கிறார்.

ஏற்கனவே வங்கி கணக்குகள் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும். வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு, அதற்காக பிரேத்யேகமாக ஏடிஎம் கார்டுகள் கொடுக்கப்படும். இன்றைய நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி ஏடிஎம் கார்டுகளை குறிப்பிட்ட மகளிருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் 1 கோடி பேருக்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்ற காரணத்தால் , நேற்று முதலே வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் என்பது நடைபெற தொடங்கி, பலருக்கு 1000 ரூபாய் வந்துவிட்டது.

இந்திட்டத்தின் மூலம் குறுஞ்செய்தி வராத குடும்ப தலைவிகள், அடுத்த 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த  30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்