கலைஞர் மகளிர் உரிமை தொகை! இம்மாதத்துக்கான ரூ.1000 செலுத்தும் பணி தொடக்கம்!:
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் ரூ.1,000 தொகையை பொதுமக்களுக்கு வங்கியில் செலுத்தும் பனி தொடங்கியது. கடந்த மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் ரூ.1,000 தொகையை பொதுமக்களுக்கு வங்கியில் செலுத்தும் பனி தொடங்கியது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பொதுமக்களுக்கு 100 ரூபாய் பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இம்மாதம் 15ம் தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றே மக்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் பயனாளிகள் அனைவரின் வங்கி கணக்குகளிலும் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.