[file image]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி வரும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 விண்ணப்பங்கள் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் வருகிறது.
இதனிடையே, மகளிர் உரிமைத்தொகை குடும்ப தலைவர்களுக்கு அனைவருக்கும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தகுதியுள்ளவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கு மட்டும் திமுக அரசு வழங்கி வருகிறது எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தனர். இதனால், குடும்ப தலைவி அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்… இந்தியர்களுக்கு 3ஆம் இடம்.!
இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விண்ணப்பங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத்தொகைக்கு மேல்முறையீடு செய்வதற்கு அக்.25ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில், 11.85 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். எனவே தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியானவர்கள் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…