Magalir Urimai Thittam: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.! விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடக்கம்.!

Published by
செந்தில்குமார்

கடந்த செப்டம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 1.6 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையங்களில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது மற்றும் இதர சந்தேகங்கள் குறித்து  விசாரிதது தீர்வு காணலாம். அதோடு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய https://kmut.tn.gov.in/login.html என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் எனவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட் அலர்ட் எதிரொலி : இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…

24 minutes ago

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

8 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

11 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

11 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

12 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

13 hours ago