Magalir Urimai Thittam: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.! விண்ணப்பத்தின் நிலையை அறிய இணையதளம் தொடக்கம்.!
கடந்த செப்டம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 1.6 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி மையங்களில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது மற்றும் இதர சந்தேகங்கள் குறித்து விசாரிதது தீர்வு காணலாம். அதோடு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறிய https://kmut.tn.gov.in/login.html என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும் எனவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.