மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேடையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிமுக சார்பில் விருதுநகரில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக பற்றி சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதே போல, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், ‘ மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். அது விரைவில் தீர போகிறது. இன்னும் 18 மாதங்கள் தான் 2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும். அதில் கண்டிப்பாக அதிமுக வெற்றிபெறும்.
மக்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். மீண்டும் தேர்தல் வரும் அப்போது சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளை அதிமுக கைப்பற்றும். கடைநிலை தொண்டனுக்கும் அதிகாரம் வழங்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். ‘ என அந்த விழாவில் பேசினார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் .
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…