விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர்..!
சந்திராயன் விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.
அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. தற்போது விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது.
இதற்கு மதுரை சண்முக சுப்பிரமணியன் தான் நாசாவுக்கு உதவினார் என்பது தெரியவந்துள்ளது. மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்கிறார். நாசா தங்கள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை செப்டம்பர் 17 ,அக்டோபர் 14, 15, நவம்பர் 01-ம் ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்டு வந்தது.
நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்களை இருப்பதாக சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்ததை சுப்பிரமணியன் நாசாவுக்கு மெயில் அனுப்பியுள்ளார். சுப்பிரமணியன் ஆய்வை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர்.