[file image]
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் திடீரென இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இந்த சமயத்தில் நிறுத்தப்பட்டிருந்த லக்னோ – ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிலிண்டர் வைத்து சமையல் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. லக்னோவில் இருந்து 15 நாட்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக கடந்த 17ம் தேதி இந்த ரயில் புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவலை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே, மதுரை ரயில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…