மதுரை ரயில் விபத்து – கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு!

toll free helpline

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் திடீரென இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. த்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் ஒரு பெட்டியில் பயணித்துள்ளனர். இந்த சமயத்தில் நிறுத்தப்பட்டிருந்த லக்னோ – ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் சிலிண்டர் வைத்து சமையல் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. லக்னோவில் இருந்து 15 நாட்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக கடந்த 17ம் தேதி இந்த ரயில் புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பயணிகளுக்கு உதவ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவலை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனிடையே, மதுரை ரயில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்