BREAKING: மதுரை தோப்பூர் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..!

மு.க.ஸ்டாலின் திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிக்சை மையத்தை திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 மாவட்டங்களில் நேற்றும், இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சுற்று பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். நேற்று திருப்பூரில் இருந்து தனது பயணம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போடக் கூடிய முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர், சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர் சோதனை ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிக்சை மையத்தை திறந்து வைத்தார். அனைத்து படுக்கைகளும் தனித்தனி மின்விசிறி, ஆவி பிடிப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது.
கொரோனா சிகிக்சை மையத்தை திறந்து வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிக்சை மையத்தை பார்வையிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025