மதுரை – தூத்துக்குடி 30% சுங்கக்கட்டணம் குறைப்பு : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
மதுரை – தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்கக்கட்டணம் குறைத்ததற்க்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை – தூத்துக்குடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், தனியார் பேருந்து உரிமமையாளர், சுங்க கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்க கட்டணத்தை குறைத்து வழங்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், எளியார்ப்பத்தியில் உள்ள சுங்க சாவடி சார்பில், சுங்கக்கட்டணம் குறைப்புக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதிகள் சுங்க கட்டணம் குறைப்புக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.