மதுரையில் பள்ளி ஆசிரியை வகுப்பறையிலேயே குத்தி கொலை! கணவர் வெறிச்செயல்!
மதுரை திருமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் ரதிதேவி. இவருக்கும் அவரது கணவர்குருமுனீஸ்வரன் என்பவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல பள்ளிக்கு வந்து பாடம் எடுத்துள்ளார் ஆசிரியை ரதி தேவி. பள்ளி வகுப்பறையில் ரதி தேவி இருப்பதை தெரிந்து கொண்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் இந்த வாக்குவாதம் முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.