மதுரை : செக்கானூரணி கட்டட விபத்து காரணம் உரிமையாளர் மாதவன்.!கைது செய்த காவல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து 9 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.இந்நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மிட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எஞ்சிய 3 பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் தற்போது போராடி வருகின்றனர்
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காசிநாதன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார்.கட்டட இடிபாடுகளில் சிக்கிய 9 பேரில் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் மேலும் 3 பேரை மீட்கும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது.
இந்த கட்டம் தொடர்ப்பாக அதன் உரிமையாளர் மாதவன் முதல் தளத்திற்கு மட்டுமே அனுமதி பெற்ற நிலையில் 3 தளங்கள் கட்டி உள்ளார்.
இந்நிலையில் 3 மாடி கட்டடம் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் செக்கானூரணி கட்டட விபத்து தொடர்பாக உரிமையாளர் மாதவன் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.