சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் 97 ஆயிரத்து 975 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதமும் , இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகியது.
இதை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் வெற்றி பெற்றதை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என கூறி வேட்பாளர் தவமணி உறவினர்களுடன் வாக்கு எண்ணும் மையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்.அப்போது இவர்களுக்கும் மற்றொரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். தடியடி சம்பவத்திற்கு பின்னர் வேட்பாளர் தவமணி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…