மதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இதில் 24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை கார்த்திக் என்பவர் தட்டிச் சென்றார்.
இந்நிலையில்,புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது.தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில்,தற்போது முதல் காலியாக மகாலிங்கசுவாமி மடத்து காளை முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது.
இதற்கிடையில்,போட்டியில் களம் காணும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு,தகுதியான காளைகள்,மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய 700 காளைகளும்,அதனை பிடிப்பதற்காக 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.அதன்படி,மாடுகளை பிடிப்பதற்காக,30 முதல் 40 பேர் வரையிலான மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு நிற சீருடையில் சுழற்சி முறையில் களமிறங்குகின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும்,சிறந்த காளைக்கு நாட்டு பசுமாடு,கன்றுக்குட்டியும் பரிசாக வழங்கப்படவுள்ளன. மேலும்,வெற்றி பெரும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசு,வெள்ளிக்காசு, சைக்கிள்,பீரோ உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படவுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…