தமிழகத்தின் 2-ஆம் தலைநகர் ‘மதுரை’ – அமைச்சர் தலைமையில் ஆலோசனை
மதுரையை 2 -ஆம் தலைநகராக அறிவிக்கக் கோரி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பங்கேற்கும் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் கூறினார்.மாற்று கட்சியில் ஒரு சிலரும் மதுரையை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக தென் மாவட்ட வர்த்தகர்களும் மதுரைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று மதுரையை 2 -ஆம் தலைநகராக அறிவிக்கக் கோரி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் பங்கேற்கும் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தென் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.