மதுரையில் பயங்கரம்..!வடமாநில இளைஞருக்கு ஓட ஓட கத்தி குத்து..!

Default Image

மதுரை  உள்ள கென்னட் மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்துக்கு கீழே வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட சரமாரியாக குத்தினார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே எஸ் .எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெட்டபட்டவர் அருகில் பட்டாக்கத்தியும், கஞ்சா பொட்டலம் இருந்ததாக போலீசார் கூறினர். மேலும் இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. யார் என்ற முழு விவரம் தெரியவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்