தமிழகத்தின் 2ஆவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தலைநகராக இருந்து வருகிறது சென்னை.அங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் தான் அனைத்து துறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகரை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இதனிடையே நேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கூட்டம், மதுரையில் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அதில் அவர், தமிழகத்தின் 2 ஆம் தலைநகரமாக மதுரையை அறிவிக்கக்கோரி, என முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், இது தென்மாவட்ட மக்களின் ஓட்டுமொத்த விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,2-வது தலைநகரமாக மதுரையை மாற்ற தற்போது கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அரசியலுக்கும், கலையுலகிற்கும் தலைநகராக மதுரை திகழ்கிறது. 2 ஆவது தலைநகரமாக மதுரையை நிச்சயமாக அறிவிக்க வேண்டும். மதுரை தான் முதன்மையான இடம் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…