பாஜகவில் இணையவில்லை – மதுரை சலூன் கடைக்காரர் மறுப்பு.!
பாஜகவில் இணையவில்லை என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணாநகர் சலூன்கடைக்காரர் மோகன் நான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மரியாதை நிமத்திமாக பாஜகவினர் தன்னை சந்தித்ததாக சலூன் கடைக்காரர் மோகன் விளக்கமளித்துள்ளார். மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்த ரூ.5 லட்சத்தை கொரோனாவால் பாதித்த ஏழைமக்களுக்கு வழங்கினார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.