பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர்!

Default Image

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தமிகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர். 

இதனையடுத்து, பிரதமர் மோடி நேற்று ‘மான் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசும் போது, மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழில் செய்யும் மோகன் என்பவரை பாராட்டி பேசியுள்ளார். ஏனென்றால், மோகன் தனது மகளின் படிப்பு செலவிற்காக சேமித்து வைத்திருந்த, ரூ.5 லட்சம் பணத்தை, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உபயோகித்துள்ளார். 

இதனையடுத்து, இதனை குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை மாநகர தலைவர் சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். மேலும், மோகன் மற்றும் அவரது குடும்பத்தினரை பொன்னாடை போற்றி வரவேற்றுள்ளனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்