மதுரை ரயில்வே கோட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்! 5 பேர் மட்டுமே தமிழர்கள்!
பொதுவாகவே மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தாரின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்டுகிறது. இதில் தமிழகத்தில் ரயில்வே பணிகளில் அண்மைக்காலமாக பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதற்கான காரணங்களாக தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு இல்லை என கூறப்படுகின்றன.
தற்போது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்வே வேலைகளுக்க்கான மத்திய அரசு தேர்வானது 2017இல் நடைபெற்றது. இதற்கான பணிநியமனம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் 572 காலிப்பணியிடங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிமாநிலத்தவர்களே இடப்பிடித்துள்ளனர் எனவும், 5 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.