இன்று மதுரையில் மாபெரும் பேரணி! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்கள்!

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- இன்று மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். அதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்
இதே போல இஸ்லாமிய அமைப்புகள் பேரணிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். திமுக சார்பில் திமுக கூட்டணி கட்சிகளோடு இணைந்து சென்னையில் பிரமாண்ட பேரணியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025