இந்திக்கு தனி உரிமை.! தமிழக இளைஞர்களுக்கு அநீதி.! எம்.பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கடும் விமர்சனம்.!
SSC தேர்வுகளுக்கு இந்தியில் கேள்வித்தாள் இருக்கிறது. ஆனால், அதற்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை. இது தமிழக இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி. என எம்.பி சு.வெங்கடேசன் டிவீட்டரில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அண்மையில், மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL எனும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகளுக்கான தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து, தனது எதிர்ப்பை டிவீட் செய்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவர்களும் டிவீட் செய்து இருந்தார். அவர் குறிப்பிட்டு இருந்த டிவீட்டில், மத்திய அரசு துறை நிறுவனங்களுக்கு SSC தேர்வுகளுக்கு இந்தியில் கேள்வித்தாள் இருக்கிறது .
ஆனால், அதற்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை. இது தமிழக இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட அநீதி. இந்திக்கான தனி உரிமை கொடுக்கப்படுவதை மறுப்போம். இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம். ‘ என டிவீட் செய்துள்ளார்.
20000 ஒன்றிய அரசுத் துறை/ நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு.
இந்தியில் கேள்வித் தாள் உண்டு.
தமிழில் இல்லை.ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி.
இந்திக்கான தனி உரிமையை மறுப்போம்.
இந்தியாவுக்கான பொது உரிமையை நிலைநிறுத்துவோம். @ssc_official__ #Tamil #Exam pic.twitter.com/WAPZxGpxsf— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 7, 2022