சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். அதில், திராவிட மாடல் காலாவதியான ஐடியா, சித்த மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக மசோதா நிறுத்திவைப்பு, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டு செய்து வருகின்றன.
சித்த மருத்துவகல்லூரி பற்றிய சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக பேசிய ஆளுநர், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரக மாநில முதல்வர்கள் இருக்கும்படி சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், கல்வித்துறையில் அரசியல் இருக்க கூடாது என்பதால் இது சரியாக இருக்காது என மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநர் ரவியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், தனது டிவிட்டர் பக்கத்தில், உத்திர பிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் துணைவேந்தராக உள்ளார். என குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது “விதிகளுக்கு முரணானது.” என் ஆளுநர் கூறுவதாக விமர்சனம் செய்து இருந்தார். மேலும், பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு எனவும் குறிப்பிட்டு தனது கருத்தை பதிவிட்டு இருந்தார் எம்.பி சு.வெங்கடேசன்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…