ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து பணியாற்றிய மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி..!பாராட்டிய மக்கள்..!

Published by
Edison

மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் லாரிக்காக நள்ளிரவு 1 மணி வரை காத்திருந்து எம்.பி. வெங்கடேசன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி பணியாற்றியுள்ள சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தென்மாவட்ட  மக்கள் அனைவரும் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் 1,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று மாலை 3 மணிக்கு வரவேண்டிய ஆக்சிஜன் லாரி இரவு 10 மணி ஆகியும் வராததால்,தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்சிஜன் தேவை குறித்து ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி நள்ளிரவு 1 மணி வரை லாரிக்காக காத்திருந்தனர்.

அதன்பின்னர்,லாரி வந்ததும் மருத்துவமனை கொள்கலனில் ஆக்சிஜன் ஏற்றும் பணி நடந்தது.இருப்பினும்,லாரி வருகை தாமதமானது குறித்து மருத்துவமனை முதல்வர் சங்குமணி,மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரியதர்ஷினி ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து,கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதின் அத்தியாவசியத்தை உணர்ந்து தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வேங்கடேசன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சிலர் ஆக்சிஜன் லாரி வரும் வரை காத்திருந்த சம்பவம் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Recent Posts

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

7 minutes ago
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

31 minutes ago
“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

52 minutes ago
LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி! LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி! 

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

8 hours ago
குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

9 hours ago
LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

10 hours ago