எங்கே எங்கள் எய்ம்ஸ்.? போராட்டத்தை அறிவித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன்.!

Published by
மணிகண்டன்

மதுரை எய்ம்ஸ் கட்டடம் குறித்து நாளை எங்கே எங்கள் எய்ம்ஸ் என்ற போராட்டத்தை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார். 

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் , நாளை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்கே எங்கள் எய்ம்ஸ் எனும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், கடந்த 2018 டிசம்பர் மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதோடு சேர்த்து நாட்டின் மற்ற பகுதிகளிலும் எய்ம்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டது.  மதுரையை தவிர மற்ற அனைத்து எய்ம்ஸ் கட்டிடமும்  75 சதவீதம் , முடிந்து விட்டது.

4 ஆண்டுகளுக்கு முன்னர் இதக்ரு மத்திய அரசு மதிப்பீடு செய்த தொகை 1,264 கோடி, கடந்த ஆண்டு மத்திய அரசு மீண்டும் மதிப்பீடு செய்த தொகை 1,977 கோடி. மத்திய அரசு ஏறக்குறைய 713 கோடியை உயர்த்தி அறிவித்தது. எதற்கு இந்த உயர்வு என்றால், எய்ம்ஸில் புதிய குறிப்பிட்ட பிரிவு சேர்க்கப்பட்டது என்றும், அதில் 150 படுக்கைகள்இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி பார்த்தால் 1 படுக்கைக்கு 4.74 கோடிரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது .

இதற்கு காரணம் மத்திய அரசின் அலட்சிய போக்கு. மறுமதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஜப்பான் நிறுவனம் 1,600 கோடியை கொடுக்கும் 350 கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஆனால் இன்னும் அதனை கொடுக்க வில்லை. அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசு தமிழகத்திடம் பாரபட்சம் பார்க்கிறது. 2026இல் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என கூறுகிறார்கள் . கட்டடம் கட்ட எப்போது தொடங்குவீர்கள் என்று தான் கேட்கிறோம். 2021இல் மதுரை எய்ம்ஸ்கு விண்ணப்பித்த 50 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார்கள். அவர்கள் சேர்ந்து 2021 -2026க்கு வெளியேறிவிடுவார்கள். ஆனால், மருத்துவ கல்லூரியை கண்ணால் பார்க்காமல் படித்து முடிக்க போகும் மாணவர்கள் இவர்கள் தான்.  எனவும் செய்தியாளர்களிடம் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

15 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

18 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

19 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

19 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago