எங்கே எங்கள் எய்ம்ஸ்.? போராட்டத்தை அறிவித்த மதுரை எம்பி சு.வெங்கடேசன்.!
மதுரை எய்ம்ஸ் கட்டடம் குறித்து நாளை எங்கே எங்கள் எய்ம்ஸ் என்ற போராட்டத்தை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன் , நாளை மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்கே எங்கள் எய்ம்ஸ் எனும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்பி கூறுகையில், கடந்த 2018 டிசம்பர் மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதோடு சேர்த்து நாட்டின் மற்ற பகுதிகளிலும் எய்ம்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட்டது. மதுரையை தவிர மற்ற அனைத்து எய்ம்ஸ் கட்டிடமும் 75 சதவீதம் , முடிந்து விட்டது.
4 ஆண்டுகளுக்கு முன்னர் இதக்ரு மத்திய அரசு மதிப்பீடு செய்த தொகை 1,264 கோடி, கடந்த ஆண்டு மத்திய அரசு மீண்டும் மதிப்பீடு செய்த தொகை 1,977 கோடி. மத்திய அரசு ஏறக்குறைய 713 கோடியை உயர்த்தி அறிவித்தது. எதற்கு இந்த உயர்வு என்றால், எய்ம்ஸில் புதிய குறிப்பிட்ட பிரிவு சேர்க்கப்பட்டது என்றும், அதில் 150 படுக்கைகள்இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படி பார்த்தால் 1 படுக்கைக்கு 4.74 கோடிரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது .
இதற்கு காரணம் மத்திய அரசின் அலட்சிய போக்கு. மறுமதிப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஜப்பான் நிறுவனம் 1,600 கோடியை கொடுக்கும் 350 கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஆனால் இன்னும் அதனை கொடுக்க வில்லை. அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசு தமிழகத்திடம் பாரபட்சம் பார்க்கிறது. 2026இல் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என கூறுகிறார்கள் . கட்டடம் கட்ட எப்போது தொடங்குவீர்கள் என்று தான் கேட்கிறோம். 2021இல் மதுரை எய்ம்ஸ்கு விண்ணப்பித்த 50 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார்கள். அவர்கள் சேர்ந்து 2021 -2026க்கு வெளியேறிவிடுவார்கள். ஆனால், மருத்துவ கல்லூரியை கண்ணால் பார்க்காமல் படித்து முடிக்க போகும் மாணவர்கள் இவர்கள் தான். எனவும் செய்தியாளர்களிடம் எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.