RSS இயக்கத்தில் அரசு ஊழியர்கள்.? சு.வெங்கடேசன் கடும் கண்டனம்.!
சு.வெங்கடேசன்: பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. மத்திய சிவில் சேவைகள் (நடத்தை) விதி 1964இன் படி இது அமலில் இருக்கிறது. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துவதுவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. ஆனால் அது தற்போது தளர்த்தப்பட்டு இருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி முன்னர் மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு, இப்பொழுது RSS இயக்கத்தில் சேர்ந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, தற்போது அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிறது மோடி அரசு என மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
மத்திய அரசு ஊழியர்கள் RSS இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சாவர்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்… pic.twitter.com/Bp8HMBm5tq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 21, 2024