மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் காலமானார்.!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்த கரு.முத்து கண்ணன் காலமானார்.
புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கருமுத்து கண்ணன் 18 ஆண்டுகளாக தக்காராக இருந்தவர. இவர் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தவர்.
70 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கண்ணீர்அஞ்சலி
மதுரையில் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த ஓர் ஆளுமை இன்று இயற்கைஎய்தியது!
தொழில்துறை,கல்வி, ஆன்மீகம் என அனைத்திலும் வெகுவாக தனது முத்திரை பதித்தவர்
திருவாளர்.கரு.முத்து கண்ணன்!
மீனாட்சிஅம்மன்கோயிலில் கடந்த 18 ஆண்டுகளாக தக்காராக இருந்தது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/0CQD589yCK— ????❤ கோபி சங்கர் ????❤ (@gopisankar3966) May 23, 2023
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கரும் தியாகராஜர் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளின் தாளாளருமான கரு.முத்து கண்ணன் அவர்கள் காலமானார் .
அவருடைய குடும்பத்திற்கு என்னுடய ஆறுதல்கள். pic.twitter.com/qPbIYAbTzB
— Lenin prabhu singaravel (@leninprabhus) May 23, 2023
@Pugal0405gmail4 @alagar_raghavan @alagappantrichy
பண்பாளர், அனைவராலும்
மதிக்கப்படுபவர், மீனாட்சி
அம்மன் கோவில் அறங்காவலர் திரு. கரு. முத்து
கண்ணன் இன்று இவ்வுலக
பயணத்தை முடித்துக் கொண்டார் ???????????????? pic.twitter.com/Jr5l77xZxU— Rm. Ramu (@RmRamu5) May 23, 2023