மதுரையில் ஊரடங்கு- இவைகளுக்கெல்லாம் அனுமதி.. இவைகளுக்கெல்லாம் தடை!
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால் அங்கு நாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நாளை முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மதுரையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இவைக்கெல்லாம் தடை, அனுமதி:
- ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு அலுவலங்கள், வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்படும்.
- காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகள் மூடப்படும்.
- மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க 1 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாவாகவே மட்டுமே நடந்து செல்லவேண்டும்.
- உணவகங்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை பார்சல் சேவை வழங்க அனுமதி. தேனீர் கடைகளில் இயங்க அனுமதி இல்லை.
- ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் மூலம் வர அனுமதி.
- தகவல் தொடர்ப்பு அலுவலகம் 5% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.