மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு! 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டு உள்ளது. கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கி அபிசித்தர் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர் அபிசித்தருக்கு `தார் SUV’ உடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. விளாங்குடியை சேர்ந்த பரத்குமார், சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி 2-வது இடம் பெற்றனர், மணி என்பவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

கீழ்க்கரை ஜல்லிக்கட்டில் பல காளைகளை வீரர்கள் அடக்கினாலும், பலவற்றை அடக்க முடியவில்லை, அந்த அளவுக்கு பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் திமிறின. அதில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் காளையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்