தீபாவளியையொட்டி கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மதுரை மல்லிப்பூ!
தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கடந்த வாரம் கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தற்போது கிலோ 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை காலம் என்றாலே பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம் தான். ஆனால், தற்போது மழையும் அதிக அளவில் இருப்பதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாகவும், அதன் காரணமாகத்தான் இவ்வளவு விலை உயர்வு எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக 5 டன் மல்லிகை பூ சந்தைக்கு வரும் நிலையில் தற்போது ஒரு டன் மல்லிகை பூ மட்டுமே வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.