அவசர தேவை என நிலத்தை பறிப்பது தவறு.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.!

Default Image

உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு- மதுரை உயர்நீதிமன்றம் கருத்து.

தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக, தேவைப்பட்ட அப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக மாற்று இடம் கேட்டு, நிலத்தை கொடுத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்காக, அவசரகால தேவை என ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.

இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தர் – ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு.’ என கருத்து தெரிவித்துள்ளது.

மனுதாரர் தரப்பில், அவசரகால உத்தரவு நிலங்களை கையகப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்