சட்ட விரோத குவாரிகள்.. தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு.! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.!
சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக குவாரிகள் அமைக்கப்பட்டோ, அல்லது அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிக அளவிலோ மண்வள கனிமங்கள் எடுக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்று தான் வருகிறது.
இதுகுறித்து, உயர்நீதிமன்றம் இன்று தானாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முக்கிய உத்தரவை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது.
அதாவது, சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளை தடுக்க தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.