அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டினால் வழக்கு போடுங்கள்.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி.!
அரசு நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை. மீறினால் வழக்கு பதியப்படும். – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.
அரசு நிலத்தில் எந்தவித அனுமதியுமின்றி மரங்களை வெட்ட கூடாது எனவும் , அதே போல, அதனையும் மீறி மரம் வெட்டினால் வழக்கு போடுங்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி அருகே இருக்கும் குடகனாறு கால்வாயில் உள்ள மரங்களை சிலர் வெட்டி அழித்துவிட்டதாக மதுரை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகையில், வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அதையும் மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது வழக்கு தொடரவும் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.