திருச்சி : 100 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Default Image

திருச்சியில் விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே ஒரு கிராமத்தில் 51 சென்ட் நிலத்தில் 100 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு விதிகள் மீறி கட்டப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சண்முகசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், விதிகள் மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இந்த கட்டிடம் கட்ட அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு. இதுகுறித்து வருகிற 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்